தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சேரகுளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சின்னார்குளம் பகுதியில் இன்று ரேசன் அரிசி கடத்துவதாக சேரகுளம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சேரகுளம் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி துரைசிங்கம் தலைமையில் காவலர்கள் வேல்முருகன், முரளி ஆகியோர் சின்னார்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆம்னி வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் வெளிமாநிலத்திற்கு கடத்துவற்காக ரேசன் அரிசியை கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து வேனில் வந்தவர்கள் வேனை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். வேனில் 50 கிலோ கொண்ட 20 ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.
இதுகுறித்து சேரகுளம் போலீசார் தூத்துக்குடி உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வேனையும், ரேசன் அரிசியையும் கொண்டு சென்றனர்.


