வல்லநாட்டில் துளசி மகளிர் சட்டக்கல்லூரி துவக்க விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் துளசி மகளிர் சட்டக் கல்லூரி துவக்க விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் ஹிமாயூன் கபீர் மற்றும் இஜாஸ் அகமது ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரியின் தாளாளர் அப்துல் கபூர் அன்வர் கபீர் முன்னிலை வகித்தார்.
இதில் நீதிமன்றங்கள், சிறைத்துறை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
சமூகநலம் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, எம் கே எம் குரூப்ஸ் தலைவர் ஹாஜி கபீர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்த விழாவில் அரசு துறை அதிகாரிகள் காவல்துறையினர் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழா ஏற்பாட்டினை மற்றும் கலந்து கொண்டனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் முகமது நன்றி கூறினார்.


