தூத்துக்குடி மாவட்டத்தில் 33% மரங்கள் இருக்க வேண்டும் ஆனால் 4.5% மரங்கள் மட்டுமே உள்ளன. இதனால் காற்று மாசுபடுகிறது. வெப்பம் அதிகரிக்கிறது. பறவைகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது, மேலும் பறவைகள் இனப்பெருக்கம் தடைபடுகிறது. இதனால் பல்வேறு நோய்கள் உருவாகி, பரவுகிறது. இதனை தடுப்பதற்காகவும் மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கங்கைகொண்டான் டி பி சோலார் லிமிடெட் , மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, ஆழ்வார் திருநகரி ஒன்றியத்துக்கு உட்பட்ட அங்கமங்கலம் ஊராட்சியில் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும்பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பானுப்பிரியா பாலமுருகன் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் பாலமுருகன் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாவட்ட தலைவர் ராஜ்கமல், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காமராஜ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கேசவன், சமூக ஆர்வலர் பாலகுமார் அங்கமங்கலம் ஊராட்சி மன்ற செயலாளர் கிருஷ்ணம்மாள் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க காயல்பட்டினம் நகர தலைவர் முத்துக்குமார் மற்றும காமராஜர் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் மதர் பனைப்பொருள் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். இதில் 10 முதல் 15 அடி உயரமுள்ள 110 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள், சமூக ஆர்வலர் பாலமுருகன் ஆகியோர் சிறப்பாக செய்தனர்


