ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலையில் இன்று இரவு சுமார் 8 மணி அளவில் ஒரு சுவற்றின் ஓரத்தில் 10 நீளமுள்ள ஒரு மலைப்பாம்பு நிற்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் இருந்தவர்களுக்கு தெரிய வரவே உடனே அனைவரும் மலைப்பாம்பை பார்க்கும் ஆர்வத்தில் அங்கே குவிந்தனர்.
மலைப்பாம்பு சுவற்றின் ஓரத்தில் நகர முடியாமல் நெளிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து அங்கு இருந்தவர்கள் வல்லநாடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து பாதுகாப்பாக வல்லநாடு மலைப்பகுதியில் கொண்டு விட்டனர்.


