பெரியதாழையில் வலைக்குள் சிக்கிய கடல் பாம்பு கடித்து மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை சேவியர் காலனியை சேர்ந்தவர் ராஜா (56) மீனவரான இவர் கடந்த 31ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு, மாலையில் கடற்கரையில் மீன் வலைகளை உலர்த்திக் கொண்டிருந்தார். அப்போது வலைக்குள் இருந்த கடல் பாம்பு ஒன்று அவரது கையை கடித்துள்ளது.
இதில் உடலில் விஷம் ஏறி மயக்கமடைந்த அவரை சக மீனவர்கள் மீட்டு, திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் லோஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


