முறப்பநாடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம்,முறப்பநாடு அருகே உள்ள கீழ வல்லநாடு கிராமம் நடுத் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து இவரது மனைவி அமுதா (40). இவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி வெளியூர் சென்றிருந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5பவுன் நகையை மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டார்.
இது தொடர்பாக முறப்பநாடு காவல் நிலையத்தில் அமுதா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த கணபதி மகன் இசக்கிதுரை (24) என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகையை மீட்டனர்.


