பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ,கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 115 வது ஜெயந்தி விழா மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபு மற்றும் ஒன்றிய தலைவர் நங்கமுத்து தலைமையில் வல்லநாடு மற்றும் கலியாவூர் ஆகிய இரண்டு இடங்களில் தேவர் திருமகனார் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பார்வையாளருமான திரு போத்தீஸ் ராமமூர்த்தி அவர்களும் மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர் குமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
அவர்களுடன் அமைப்புசாரா பிரிவு மாவட்ட செயலாளர் கார்த்திக், இளைஞரணி மாவட்ட செயலாளர் ஹர ராமன், சமூக ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர் அழகு மணிகண்டன், அமைப்புசாரா பிரிவு ஒன்றிய தலைவர் வேல்மையில், பிரச்சார பிரிவு ஒன்றிய தலைவர் மணிகண்டன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் சரவணன், மாவட்ட செயலாளர் முருகன், விளையாட்டு பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்குமார், கல்வி நிறுவனங்களின் தொழிலாளர் நலப் பிரிவு முன்னாள் மாநிலச் செயலாளர் செல்வின் சவான் ,OBC அணி மாவட்ட செயலாளர் சுடலைமுத்து , பிறமொழி பிரிவு மாவட்ட செயலாளர்கள் தம்பான், செந்தூர பாண்டியன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் சிவசுப்பிரமணியன், விவசாயி மாவட்ட செயலாளர் பேச்சு, பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் ராமலிங்கம், கோவில் மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் விநாயகப் பெருமான், ஒன்றிய பொதுச் செயலாளர் பேச்சிமுத்து, ஒன்றிய பொருளாளர் பால் துறை, ஒன்றிய துணைத் தலைவர் சித்திரை குமார், ஒன்றிய செயலாளர் சரவண பெருமாள், சமூக ஊடக பிரிவு ஒன்றிய தலைவர் சீனிவாசன் ,அரசு தொடர்பு ஒன்றி தலைவர் வசந்த், கோவில் மேம்பாட்டு பிரிவு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள்


