வல்லநாடு முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா நடந்தது. வல்லநாடு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இம்மாதம் 25 ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதனை முன்னிட்டுத் தினமும் யாகசாலை பூஜை மற்றும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
கந்த சஷ்டி ஆறாம் நாளில் வல்லநாடு வடக்கு பஜாரில் சூரசம்ஹாரம் நடந்தது. இதனைக் காண வல்லநாடு மற்றும் சுற்று கிராம மக்கள் திரளாகக் குவிந்தனர்.
கோவில் தலைமை அர்ச்சகர் சண்முகசுந்தரம் பட்டர் தலைமையில் அம்பை ஞானம் பட்டர்,வெங்கடேச பட்டர் ஹரிஹர பட்டர் ஆகியோர் முருகப்பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் காட்சி நடந்தது. கூடியிருந்த முருக பக்தர்கள் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷமுழக்கமிட்டனர். முறப்பநாடு காவல் ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்


