ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க மதர் சமூக சேவை நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக பணி செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கடற்கரையில் மீண்டும் பனை மர விதைகளை விதைப்பதற்காக பண விதைகள் பிரித்தெடுக்கும் பணி மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவர் டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமையில், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாவட்ட தலைவர் ராஜ்கமல், காயல்பட்டினம் நகரத் தலைவர் முத்துக்குமார், ஏரல் பகுதி தலைவர் கணேஷ், சமூக ஆர்வலர் சங்கர், லீடு டிரஸ்ட் இயக்குனர் பானுமதி ஆகியோர் ஏற்பாட்டில் பனை விதை விதைக்க பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.


