ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் வெண்கல முழுவுறுவச் சிலை திறப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம் பகுதியில் 1985ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு கெட்டியம்மாள்புரத்தை சேர்ந்த ராமையாதேவரால் அப்போது சிலை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையை பராமரித்து வந்தனர். இந்நிலையில், அந்த இடத்தில் மணிமண்டபம் அமைத்து முத்துராமலிங்க தேவருக்கு வெண்கல சிலை நிறுவ வேண்டும் என அ.தி.மு.க ஆட்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனிடம், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவைகுண்டம் சுரேஷ் தேவர் தலைமையில் கட்சினர் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 38 ஆண்டு கால பழமையான சிமென்ட் சிலையை அகற்றி புதிய வெண்கல திருஉருவ சிலையையும் மணிமண்டபத்தையும், அதே இடத்தில் புதுப்பித்து அமைத்திட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
கெட்டியம்மாள்புரத்தை சேர்ந்த ராமையாதேவர் மகன்களும் தொழிலதிபர்களுமான ஏ.ஆர்.காசிபாண்டியன், ஏ.ஆர்.ராமசுப்பிரமணியன் ஆகியோர் வெண்கலச்சிலை அமைப்பதற்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் முத்துராமலிங்க தேவர் மணிமண்டபம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினரின் தொடர் முயற்சிகளால் முத்துராமலிங்கத்தேவர் மணிமண்டபம் அமைக்கப்பட்டு புதிய வெண்கல சிலையும் அமைக்கும் பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை திறப்பு விழா கடந்த 27 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் வெண்கல சிலை அமைப்பதற்கான முறையான அனுமதி இல்லை என காவல்துறையினர் திறப்பு விழா நடத்திட அனுமதி வழங்கவில்லை. இதனால் திறப்புவிழா ஒத்திவைக்கப்பட்டது இந்நிலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பாக மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை சுரேஷ்தேவர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மணிமண்டபம் மற்றும் வெண்கல சிலை திறப்பதற்கான அனுமதி பெற்றுத் தரும்படி கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, முத்துராமலிங்க தேவர் சிலை திறக்க அனுமதி அளித்து அரசானை வெளியிட்டப்பட்டது.
இதை தொடர்ந்து அ.தி.மு.க மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இணைந்து முத்துராமலிங்கத் தேவர் சிலை திறப்பு விழா இன்று ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம் பகுதியில் நடந்தது. சிலை திறப்புவிழாவிற்கு தொழிலதிபர்கள் ஏ.ஆர். காசி பாண்டியன், ஏ.ஆர். ராமசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் முன்னிலையில் அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவரின் முழுதிருஉருவ வெண்கல சிலையை திறந்து வைத்து பேசினார். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் வழங்கினார். அ.தி.மு.க. தெற்கு மாவட்ட அவை தலைவர் திருப்பாற்கடல் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்.எல்.ஏ வுமான தளவாய்சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ முருகையா பாண்டியன், முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ, அமைப்பு செயலாளர் சின்னதுரை, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, நெல்லை முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ, அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அ.தி.மு.க கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநில இளைஞரணி தலைவர் சுரேஷ்தேவர், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், அ.தி.மு.க சார்பு அணி நிர்வாகிகள் பிரபாகர், விக்னேஷ், தன்ராஜ், வக்கீல் சரவணபெருமாள் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல செயலாளர் கல்விகுமார், துணை தலைவர் பார்வதி, வட்ட செயலாளர் மனுவேல்ராஜ், முன்னாள் தொகுதி இணை செயலாளர் ராஜப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.மாதவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சி முடிவில் அதிமுக நகர செயலாளர் காசிராஜன் நன்றி கூறினார்.


