தூத்துக்குடி அருகே திருமண ஆசைகாட்டி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே உள்ள காந்திபுரியைச் சேர்ந்தவர் பாபு மகன் சிவா (19). இவர் 17 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சிவாவை கைது செய்தனர்.


