தூத்துக்குடியில் வரும் நவ. 22ஆம் தேதி புத்தகக் கண்காட்சி கும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புத்தகத் திருவிழா – 2022 தொடா்பான இலச்சினையை கனிமொழி எம்.பி. வெளியிட்டாா். இதில், சமூக நலன் – மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், மேயா் பெஜெகன், எம்எல்ஏ எம்.சி.சண்முகையா, மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீஆகியோா் பங்கேற்றனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.செந்தில் ராஜ் கூறியது: மாவட்ட நிா்வாகம் சாா்பில் தூத்துக்குடி ஏவிஎம் மஹாலில் நவ. 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தினமும் காலை 11 மணிமுதல் இரவு 9 மணிவரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். இதில், சுமாா் 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம் பெறவுள்ளன. அதேபோல, கலை இலக்கியம் சாா்ந்த தகவல்களை அறிந்து பயன்பெற ஏதுவாக சிறப்பு அரங்குகளும் ஏற்படுத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்.


