தூத்துக்குடியில் அமைச்சர், எம்பி, மாவட்ட ஆட்சியருக்கு பள்ளி, மாணவ, மாணவிகள் தீபாவளி வாழ்த்துக் கடிதம் எழுதினர்.
தூத்துக்குடி விவிடி நினைவு ஆரம்ப பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமி ஆகியோருக்கு மாணவ, மாணவிகள் தீபாவளி வாழ்த்துக் கடிதம் அனுப்பும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிாியா் ஜெயவேணி தலைமை வகித்தார்.
இவ்விழாவில் 2 வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் தபால் அட்டையில் தீபாவளி நல் வாழ்த்துக்கள் அனுப்பினர். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட காமராஜா் நற்பணி மன்றம், ஆரோக்கியபுரம் காமராஜா் நடமாடும் நூலகம் சாா்பில் தலைவா் லாரன்ஸ், செயலாளர் வழக்கறிஞா் சிலுவை, பொருளாளா் ஆஸ்வால்ட் அமைப்பாளா் ரவி ஆகியோர் செய்திருந்தனர்.


