தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை நியாய விலை கடையில் தூத்துக்குடி மாவட்டம் 36 வது ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு நியாய விலை கடை முன்பு மரக்கன்றுகளை நட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ரேஷன் கடை ஊழியர் பூபாலன் தலைமையில் மற்றும் 10 வார்டு கவுன்சிலர் செல்வம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துப்பாண்டியன் முன்னிலையில் மரக்கன்று நட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் மல்லிகா கனி மற்றும் சமூக ஆர்வலர் ரோஸ்லின் கலந்து கொண்டனர்.


