ஏரல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள உமரிக்காடு ஆத்தங்கரை தெருவைச் சேர்ந்தவர் பெனிடிக் இவரது மனைவி ஆனந்தி (60). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி தம்பதியர் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றனர்.
பின்னர் நேற்று 2ஆம் தேதி ஊர் திரும்பினர். அப்போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே வீட்டின் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 14 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். இது குறித்து ஆனந்தி ஏரல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


