செய்துங்கநல்லூரில் புதிய சாலை திறப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு முஸ்லீம் புதுத்தெருவில் பல ஆண்டுகளாக சாலை மிகவும் மோசமாக இருந்தது. மழை நீர் தேங்கினால் வெளியேற்ற முடியாத நிலையில் நீடித்தது. இந்த பகுதியில் புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதற்கான பணிகள் தொடங்கியது. இந்த நிலையில் புதிதாக 1வது வார்டு முஸ்லீம் புதுத்தெருவில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலை திறப்பு விழா இன்று நடந்தது. இந்த சாலையை செய்துங்கநல்லூர் ஊராட்சி மன்றத்தலைவர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் விவசாய அணி தலைவர் குமார், சித்திரைப்பாண்டி, அனைத்து வார்டு உறுப்பினர்கள், காண்ட்ராக்டர் பொன்னையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


