வல்லநாட்டில் வெள்ளையத்தேவன் 223வது நினைவு தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் மணி மண்டபம் அமைந்துள்ளது. இன்று அவரின் 223வது நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிலைய செயலாளரும், நெல்லை மண்டல பொறுப்பாளருமான மாணிக்கராஜா தலைமையில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் சிவபெருமாள், தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் பிரைட்டர், திருநெல்வேலி மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, வடக்கு மாவட்டச் செயலாளர் பரமசிவம், இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பூலோகப்பாண்டியன், இளைஞரணி துணைச்செயலாளர் சண்முகராஜ், வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் ஞானசங்கர், வர்த்தக அணி இணைச்செயலாளர் பாக்கியசெல்வம், பிஆர்பி ராஜா, அம்மா தொழிற்சங்க டாஸ்மாக் பிரிவு துணைத்தலைவர் கொம்பையா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


