ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் 75 ஆவது இந்திய சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு கிராமத்தில் வல்லநாடு வடக்கு பஜார் சந்திப்பு மற்றும் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மணிமண்டபம் முன்பு 75வது சுதந்திர தின விழா நடந்தது.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீவைகுண்டம் நேதாஜி யுவா கேந்திரா தலைவரும் அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் மூத்த தலைவர் மருதுபாண்டியன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வல்லநாடு கஸ்பா ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா முருகன், துணைத் தலைவர் சுப்புலட்சுமி, சிறப்பு அழைப்பாளராக முறப்பநாடு காவல் ஆய்வாளர் அசோகன், முறப்பநாடு குற்றப் பிரிவு ஆய்வாளர் மற்றும் முறப்பநாடு உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார், வல்லநாடு சித்தா டாக்டர் செல்வகுமார், வல்லநாடு சித்தர் சிதம்பர சாமி தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் பழனிசாமி, மாரியப்பன், சுந்தர், சரவணன், முருகன், கொம்பையா, சிதம்பரம், குமார், ஆறுமுகநயினார், சுப்பிரமணியன், தங்கபாண்டியன், கந்தசாமி மற்றும் வல்லநாடு கிராம அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


