75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 13, 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் இல்லம் தோறும் தேசியக்கொடிகளை ஏற்ற வேண்டும், முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் தங்களது முகப்பு படங்களாக தேசியக்கொடியை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களும் அரசு அலுவலக பணியாளர்களும் கடைகளில் தேசியக் கொடிகளை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் தலைமை தபால் அலுவலகத்தில் 2000 தேசிய கொடிகளை விற்பனைக்காக வைத்துள்ளனர்.
ரூ.25 மதிப்புடைய தேசியக்கொடியின் முதல் விற்பனையை போஸ்ட் மாஸ்டர் அய்யாதுரை இனறு தொடங்கி வைத்தார். ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி 13வது வார்டு உறுப்பினர் உச்சிமாகாளி ராமகிருஷ்ணன், தனது வார்டு பகுதிகளில் உள்ள 130 வீட்டில் உள்ளவர்களுக்கும் இலவசமாக தேசிய கொடிகளை வழங்குவதற்காக 130 தேசிய கொடிகளை பெற்றுக் கொண்டார்.
தேசியக்கொடி முதல் விற்பனை தொடக்க நிகழ்வில் போஸ்ட் மேன்கள் நாராயணன், ஆறுமுகப்பெருமாள், சாரல் பவுண்டேஷன் இயக்குனர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தாலுகா அலுவலக பணியாளர்கள் மற்றும் டிஎஸ்பி அலுவலகப் பணியாளர்கள் உள்பட பலர் தேசியக்கொடிகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.


