கருங்குளத்தில் திருவாசகம் முற்றோதுதல் விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் தனியார் திருமண மண்டபத்தில் திருவாசகம் முற்றோதுதல் பெருந்திருவிழா இன்று நடந்தது.
இதனை திருக்கழுக்குன்றம் திருவாசக சித்தர் தாமோதரன் நிகழ்த்தினார். பழனி சிவத்தொண்டர் துறவி இராஜம்மாள் சங்கரன் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் பாடல்களை பாடினர்.
இதற்கான ஏற்பாடுகளை பாளையங்கோட்டை மற்றும் கருங்குளம் அனைத்து சிவனடியார் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.


