செய்துங்கநல்லூர் நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் அரசு நூலகத்தில் வானவில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு வாசகர் வட்ட தலைவர் திருமலைநம்பி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற தொலை தொடர்பு அதிகாரி முத்துசாமி முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்புரை ஆற்றினார். கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கட்டிட சீரமைப்பு பணி மேற்கொள்ள இருக்கும் தோணி அப்துல்காதருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 75வது சுதந்திர அமுத பெருவிழா சிறப்பாக கொண்டாடுவது, நூலகத்திற்கு பஞ்சாயத்து குடிநீர் இணைப்பு வாங்குவது, புதிய கட்டிடம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினருக்கு நினைவூட்டல் கடிதம் வழங்குதல், நூலகத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது, உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் வாசகர் வட்ட தலைவர் நம்பி சுப்பையா மற்றும் காளிமுத்து, பரமசிவன், நூலகர் பாலமுருகன் கலந்து கொண்டனர். நூலகர் சம்சுதீன் நன்றி கூறினார்.


