தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பண்டாரவிளை பகுதியைச் சேர்ந்த யோசேப் மகன் இன்பராஜ் (46) என்பவருக்கு சொந்தமான நட்டாத்தியில் இருந்து பண்டாரவிளை ரோடு பகுதியில் உள்ள குடோனிலிருந்து கடந்த 31.05.2022 அன்று கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் 400 சென்ட்ரிங் சீட்டுகள் காணாமல் போயுள்ளது.
இதுகுறித்து இன்பராஜ் சாயர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது தூத்துக்குடி மடத்தூர் துரைக்கனி நகர் பகுதியை சேர்ந்த வாழவெட்டி முத்து மகன் நவீன் சிவா (22) என்பவர் இன்பராஜின் குடோனில் இருந்து 400 சென்ட்ரிங் சீட்டுகளை சரக்கு வாகனத்தில் திருடி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முனியசாமி நவீன் சிவாவை கைது செய்து அவரிடமிருந்த திருடுவதற்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து சாயர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


