ஏரலில் புதிய வட்டாட்சியர் அலுவலகத்தை மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரலில் வட்டாட்சியர் அலுவலகம் 3.78கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டாட்சியர் அலுவகத்தை
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து ஏரலில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் மீன்வளம் மீனவ நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து அலுவலகத்தை பார்வையிட்டார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து வட்டாட்சியர் குடியிருப்பையும் திறந்து வைத்தார் மேலும் புதிய வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மரக்கன்றையும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நட்டு வைத்தார்.


