தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இன்றைய தினம் ஆடி 18 பெருக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதற்காக மாலையில் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் கதையில் மகா சங்கல்பம், சிவபூஜை, அபிஷேகம், நதி பூஜை, தாமிரபரணி தேவிக்கு சகல சௌபாக்கிய சமர்ப்பணம், தீபாராதனை, சமய சிந்தனை மகளிர்களுக்கு திருமண மாங்கல்யம் சரடு வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து தாமிரபரணி நதிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்பட 18 வகையான அபிஷேகங்கள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த பூஜையை சேதுராமலிங்கம், சேகர் பட்டர், சிவா பட்டர் ஆகியோர் செய்து இருந்தனர்.


