தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெற்கு காரசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்சியம்மாள். 95 வயதான இவர் கணவர் இறந்ததால் தனியாக குடியிருந்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக வீட்டை விட்டு வெளியில் செல்வது கிடையாது. அருகில் இருக்கும் உறவினர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தபோது அவர் குடிசையில் தீப்பிடித்துள்ளது. இரவு நேரம் என்பதால் யாரும் பார்க்கவில்லை. பின்னர் ஆட்சியம்மாள் அலறல் சத்தம் கேட்கவே அருகில் இருந்தவர்கள் வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் ஆட்சியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சேரகுளம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


