தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பகுதியில் உதவி ஆய்வாளர் ராஜாமணி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிவகளை கிராம நிர்வாக அலுவலகம் அருகில் சந்தேகத்திற்கிடமாக அரசமுத்து என்ற 62 வயது முதியவர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து விசாரித்ததில் அவர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக 3 கிலோ 100 கிலோ கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் அரசமுத்துவை கைது செய்து அவரிடம் இருந்த 3 கிலோ 100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


