தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசிவன் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் முன்னிலை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நற்பண்புகள் குறித்தும், காவல்துறை செயல்பாடுகள் பற்றியும், போதை பழக்க வழக்கத்தின் தீமைகள் குறித்தும் சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் குறித்தும், சமுதாய நலனில் மாணவர்களின் பங்களிப்பு குறித்தும் சிறுவனுடன் டிஎஸ்பி பேசினார்.
தமிழ் ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார். விழாவில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


