தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தங்கையாபுரம் வேதக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஞானமணி. இவரது மனைவி லலிதா(65). இவர்களுக்கு 3 மகன்கள் 1 மகள் உள்ளனர். இதில் மகன்கள் அனைவரும் திருமணமாகி பெங்களூரில் கடலைமிட்டாய் கம்பெனி நடத்தி வருகின்றனர். மகன் செய்துங்கநல்லூரில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஞானமணி இறந்து விட்டார். லலிதா தனியாக தங்கையாபுரத்தில் குடியிருந்து வருகிறார்.
லலிதா கடந்த 20ம் தேதி தனது மகளின் மகளுக்கு உடல்நிலை சரியில்லை என மகள் கூறியதால் அவரை பார்ப்பதற்காக செய்துங்கநல்லூர் வந்துள்ளார். கடந்த ஒரு வார காலமாக லலிதா மகளுடன் இருந்துள்ளார்.
இதற்காக வீட்டில் இருந்த 56 பவுன் நகையை பெட்ரூமில் உள்ள ஒரு சேரில் வைத்து அதன் மேல் தலையனை மற்றும் துணிகளை போட்டுள்ளார். மேலும் சில நகைகளை பெட்ரூமில் உள்ள அலமாரியில் வைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று காலை சொந்த ஊரான தங்கையாபுரத்திற்கு சென்றுள்ளார். வழக்கம்போல் வீட்டை திறந்துள்ளார். பின்னர் நகையை எடுத்து வைப்பதற்காக பெட்ரூம் சென்று பார்த்துள்ளார். அங்கு நகை இல்லாததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அலமாரியில் இருந்த நகையும் காணாமல் போய் உள்ளது.
உடனே இதுகுறித்து லலிதா ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் வீட்டை சோதனையிட்டனர். அதில் பெட்ரூமில் ஜன்னலில் ஒரு பகுதி உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பின் வாசலில் பூட்டை உடைக்க முயற்சி செய்து முடியாமல் விடப்பட்டதையும் தெரிய வந்தது.
இதற்கிடையில் தூத்துக்குடி எஸ்பியின் தனிப்பிரிவு எஸ்ஐ பெட்ரிக்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வீடு உடைக்காமல் நகை திருடு போனதால் உறவினர்கள் யாரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்று போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடு திறக்காமல் 56 பவுன் நகை காணாமல் போன சம்பவம் அப்பகுதியியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


