ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வாளருக்கு சிறந்த இளம் தொல்லியல் ஆய்வாளர் விருது கிடைத்துள்ளது. அவரை மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி. செந்தில் ராஜ் பாராட்டினார்.
திருச்சி மண்டல தொல்லியல் ஆய்வாளர் யதீஸ்குமார். ஈரோடு மாவட்டம் விருமாணடம் பாளையத்தினை சேர்ந்த இவர் ஆதிச்சநல்லூரில் தற்போது மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வில் ஈடுபட்டு வருகிறார். இவருககு புதுக்கோட்டையில் 17.07.2022 அன்று நடைபெற்ற தொல்லியல் கழக
மாநாட்டில் சுப்பராயலு பெயரில் சிறந்த இளம் தொல்லியல் ஆய்வாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இவரை தூத்துககுடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு. கி. செந்தில் ராஜ் பொன்னாடைபோர்த்தி கௌரவித்து நினைவு பரிசு பரிசு வழங்கினார். மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து நடந்த இந்த நிகழ்ச்சியில் திருச்சி மண்டல மத்திய தொல்லியல் துறை இயககுனர் அருண்ராஜ், துணை ஆட்சியர் சரவணன், ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெகடர் அன்னராஜ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் கடந்து வந்த பாதை குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் மரு. கி. செந்தில் ராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
விருது பெற்ற யதீஸ் குமார் தொல்லியலில் முதுகலை ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர், தமிழ் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் பெற்றார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தொல்லியல் பட்டயபடிப்பு படித்துள்ளார்.
தழிழக வரலாறு, எழுத்து மற்றும் மொழிக்கு பெருமை சேர்த்த சிறந்த கண்டுபிடிப்புகள் இவருடையதாகும். புலிமான்கோம்பை சங்க காலத்திய தழிழ் பிராமி எழுத்துப்பொறிப்புடன் கூடிய நடுகற்கள். வைகை நதிகரையில் 2006-ம் ஆண்டில் கண்டுபிடித்தது, தாதப்பட்டி சங்க கால தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பு குத்துக்கல், வைகை நதிகரையில் 2006 -ம் ஆண்டில் கண்டுபிடித்தது, பொருந்தல், அமராவதி நதிகரையில், (பழநி அருகில்) சங்க கால வாழ்விடம், ஈமச்சின்னகள் 2008 ஆண்டில் கண்டுபிடித்தது, தமிழகத்தில் 650 க்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்கள், மற்றும் தொல்லியல் சின்னங்கள் கண்டுபிடித்தது இவரது ஆய்வில் அடங்கும்.


