கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் வீட்டில் இறந்த முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக நீர்நிலைகள் இருக்கின்ற பகுதிகளில் அவர்களுக்கு தர்பணம் கொடுப்பது வழக்கம். அதிலும் ஆடி அமாவாசை தினம் என்பது மிகவும் சிறப்பு பெற்றது.
இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று இந்த ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் அதிகாலை முதலே ஏராளமானோர் இறந்த முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க திரண்டனர். அவர்கள் தங்களின் முன்னோர்களின் பெயரை கூறி தாமிரபரணி ஆற்றில் நீராடி அவர்களுக்கு தர்பணம் கொடுத்தனர்.


