திருநெல்வேலியில்(24.07.2022) அன்று நடைபெற்ற தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு சார்பில் நடந்த விழாவில் தாமிரபரணி ஆற்றுப் பாசன உரிமைக்காகவும் ஆதிச்சநல்லூர் பழந்தமிழர் நாகரீகம் குறித்தும் சிறந்த முறையில் ஆய்வுகள் மேற்கொண்டு நூல்கள் பல எழுதி வரும் (முத்தாலங்குறிச்சி காமராசு) எனக்கு பொருநைத்தமிழ்க் காவலர் என்ற விருது வழங்கி பாராட்டி மகிழ்ந்தனர். விருதை நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் வழங்கினார்கள். இதற்கு ஏற்பாடு செய்த வியனரசுஅண்ணா அவர்களுக்கும் தமிழ்நாடு தமிழத் தேசத் தன்னுரிமைக் கட்சியை சேர்ந்த அன்பர்களுக்கும் நன்றி. அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


