ஏரல் விஸ்வகர்மா கலை வளாகத்தில் கல்வி பரிசளிப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் விஸ்வகர்மா கலை வளாகத்தில் விஸ்வகர்மா பேரவை சார்பில் 6 ம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஏரல் அரசு கண் பரிசோதகர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். ஏரல் நகைமதிப்பீட்டாளர் அருணன், சாத்தான்குளம் மகாராஜன் ஆச்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாத்தான்குளம் மூக்காண்டி, கம்பம் விலங்குமணி, சென்னை இசக்கி மணி, ஏரல் அருணாசலம் ஆகியோர்களுக்கு விருதுகளும் ஆயிரம் ரூபாய் பொற்கிழியும் வழங்கப்பட்டது. மதுரை குருஜெயச்சந்திரன் பதிப்பகம் வெளியிட்ட கவிஞர் ஏரல் ராஜனின் கம்மாளரின் சாஸ்தா கோவில்கள் எனும் இன வரவியல் ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. உடன்குடி வானமாமலை பெருமாள், ஏரல் கணேசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
சாத்தான்குளம் வேலாச்சாரியார் எழுதிய விழா பாராட்டுக் கட்டுரைகள், மதுரை விஸ்வகர்மா காயத்ரி ட்ரஸ்டி வெளியிட்ட விழிப்புணர்வு மலர், திண்டுக்கல் தாமரைக்கண்ணன் பொற்கொல்லர் நூல் அறிமுகப்படுத்தப்பட்டது.
22 ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு தங்க நாணயம், இரண்டு வெள்ளி நாணயங்கள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டது.
யோகா ஆர்வலர் தென்கரை மகாராஜன், மந்திரகுமார், அழகு முருகன், கணேசன், ஏரல் ராஜன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.


