ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு மையத்தை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மட்டும் 9 தேர்வு மையங்களில் 2400 பேர் இன்று இந்த தேர்வு எழுதுகின்றனர்.
இந்த நிலையில் இந்த தேர்வு பணிகளை பார்வையிட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வருகை தந்தார். அவர் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் டிஎன்பிஎஸ்சி தேர்வு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் முத்து சிவன் ஆகியோர் உடன் இருந்தனர்.


