வல்லநாட்டில் கன்று பராமரிப்பு பெட்டகம் வழங்கும் திட்டம். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்து வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு கால்நடை மருத்துவமனையில் இன்றைய தினம் கன்று பராமரிப்பு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவி இயக்குனர் ஜோசப்ராஜ் தலைமை வகித்தார்.
கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, வல்லநாடு கால்நடை மருத்துவர் ஆர்த்தி, புதுக்கோட்டை மருத்துவர் ஆனந்தராஜ், தெய்வச்செயல்புரம் மருத்துவர் சூர்யா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் முறப்பநாடு புதுக்கிராமம் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பயனாளிகளுக்கு 3150 ரூபாய் மதிப்புள்ள கன்று பராமரிப்பு பெட்டகங்களை பயனாளிகளுக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வல்லநாடு கால்நடை மருத்துவமனையில் அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு செய்து கால்நடை மருத்துவர்களிடம் விளக்கங்கள் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்காந்தி, வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சந்திரமுருகன், ஒன்றிய துணைச் செயலாளர் வீரபாகு, ஒன்றிய அவைத்தலைவர் வெங்கடசுப்பு, மாவட்ட பிரதிநிதி மாரிமுத்து, கிளைச் செயலாளர் சின்னத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.


