தூத்துக்குடி மாவட்டத்தில் 3 கிராம நிர்வாக அலுவலர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளர்.
தூத்துக்குடி டவுன் 1 கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த ராதா, தூத்துக்குடி டவுன்2 கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த பராசக்தி ஆகிய இருவரும் பதவி உயர்வு பெற்றதை அடுத்து தூத்துக்குடி சிப்காட் வணிக வளாகத்தில் உள்ள அல்லிக்குளம் எண்ணெய் நிறுவனத்திற்கு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மாப்பிள்ளையூரணி கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் பதவி உயர்வு பெற்றதை அடுத்து நெடுஞ்சாலை துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மூன்று கிராம நிர்வாக அலுவலர்கள் பதவி உயர்வு பெற்றதை அடுத்து தூத்துக்குடி டவுன் 1 கிராம நிர்வாக அலுவலராக பொறுப்பு திரேசம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி டவுன் 2 கிராம நிர்வாக பொறுப்பு அலுவலராக ராஜலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல மாப்பிள்ளையூரணி கிராம நிர்வாக பொறுப்பாளராக ராஜேஷ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.


