ஸ்ரீவைகுண்டம் ஆதி குமரகுருபரர் சுவாமிகள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.
சென்னையில் ஜூலை 28ம் தேதி 44 வது ஒலிம்பியாட் சதுரங்க போட்டி நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் ஸ்ரீவைகுண்டம் ஆதி குமரகுருபரர் சுவாமிகள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
பள்ளி தலைமை இக்னேஷியஸ் சுமதி ஆசிரியை வரவேற்று பேசினார். பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற சதுரங்க போட்டிகளை ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி பாலமுருகன், துணைத் தலைவர் கன்னியம்மாள் சண்முகசுந்தரம், வழக்கறிஞர் அமிர்தவள்ளி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஸ்ரீவைகுண்டம் வட்டார கல்வி அலுவலர் செல்வகுமார், கருங்குளம் வட்டார கல்வி அலுவலர் மரிய ஜெயஷீலா, சந்துரு உள்ளிட்டோர் பேசினர்.
ஸ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட சதுரங்க போட்டியில் உடற்கல்வி ஆசிரியர்கள் அசோக் குமார் மற்றும் ஃபிராங்கிளின் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.
இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியை சாந்தா நன்றி கூறினார்.


