தூத்துக்குடி மாவட்டத்தில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற 2 பேர் உள்பட மொத்தம் 11 பேரை பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பிறப்பித்து உள்ளார்.
அதன்படி நெல்லை விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.அசோகன் தூத்துக்குடி முறப்பநாடு குற்றப்பிரிவுக்கும், சேரன்மாதேவி சுகாதேவி, கோவில்பட்டி மேற்கு குற்றப்பிரிவுக்கும், ஆத்தூர் அய்யப்பன் தூத்துக்குடி மத்தியபாகத்துக்கும், திருவண்ணாமலை சிவில் சப்ளை குற்றப்பிரிவில் பணியாற்றிய பாலமுருகன் ஆத்தூருக்கும், கோவில்பட்டி மேற்கு குற்றப்பிரிவு பத்மாவதி, கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும்,
பேரூரணி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பி.முத்து பதவி உயர்வு பெற்று நெல்லை தொடர் குற்றப்பிரிவு-2-க்கும், தூத்துக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த டி.கிறிஸ்டி பதவி உயர்வு பெற்று குளச்சல் காவல் நிலையத்துக்கும், நித்திரவிளை வின்சென்ட் அன்பரசி, புதுக்கோட்டை காவல் நிலையத்துக்கும், கொல்லங்கோடு அந்தோணியம்மாள் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவுக்கும், சமயநல்லூரில் பணியாற்றிய உமாதேவி தூத்துக்குடி ஏ.சி.டி.யு. பிரிவுக்கும், தாழையூத்து பத்மாநாபபிள்ளை செய்துங்கநல்லூருக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.


