சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தை சேர்ந்தவர் முருகேசன்.இவர் இந்து முன்னணி தெற்கு மாவட்ட தலைவராக உள்ளார் இவருடைய தோட்டம் பழனி யப்பபுரத்தில் பன உள்ளது. அதில் விவசாய பணிகள் நடந்து வருகிறது.
கடந்த இரண்டு நாள் முன்பு விவசாயிகள் பணிக்கு சென்ற போது தொழிலாளர்கள் சிறுத்தை போன்ற மிருகத்தை பார்த்துள்ளனர் மேலும் நேற்று முருகேசன் தோட்டத்திற்கு சென்றபோது சிறுத்தை புலி போன்ற ஒன்று ஒடி உள்ளது. இதனால் அப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாக விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து முருகேசன் வனத்துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார் .


