கருங்குளம் வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் தெளிப்பான்கள் விநியோகம். கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்.
கருங்குளம் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 2021-22 ஆண்டில் சேரகுளம், வல்லக்குளம், கீழவல்லநாடு மற்றும் செய்துங்கநல்லூர் ஆகிய நான்கு கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தேர்வாகியுள்ள கிராம விவசாயிகளுக்கு கைத்தெளிப்பான், விசைதெளிப்பான் ஆகிய இடுப்பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. மேற்கண்ட நான்கு கிராம விவசாயிகளுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் இந்த இடுப்பொருட்கள் கைத்தெளிப்பான்களுக்கு ரூ.750/& மானியமும், விசைத்தெளிப்பான்களுக்கு ரூ.3000/& மானியமும் வழங்கப்படுகிறது.
மேலும் இத்திட்டத்தில் நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் உரமும் நெற்பயிருக்கு ஜிங் சல்பேட் நுண்ணூட்ட உரமும் மானியத்தில் வழங்ப்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு செய்துங்கநல்லூரில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு மேற்கண்ட கிராம விவசாயிகளையும் கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


