குடும்பத்தகறாரில் மனைவியை கொலை செய்த சம்பவத்தில் கணவர் உள்பட இரண்டு பேர் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகில் உள்ள செட்டிமள்ளன்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி வள்ளி. இவர்கள் இருவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமண முடிந்து ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை கணவன் மனைவி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் தனது உறவினரான பிரேம்குமார் என்பருடன் இணைந்து மனைவி வள்ளியை வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் வள்ளியின் கணவர் வேல்முருகன் மற்றும் வேல்முருகன் உறவினர் பிரேம்குமார் ஆகிய இருவரும் ஸ்ரீவைகுண்டம் ஜேஎம்-2 நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இவர்கள் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலுக்கு பின்னர் தூத்துக்குடி ஜேஎம்-3 கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்ட்ரேட் மயில்சாமி உத்தரவிட்டார்.


