தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தருவைகுளம் கிராமத்தில் உள்ள மக்கள் மீன்பிடி தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். கடலில் மீன்பிடிக்க செல்லும் பொழுது இயற்கை பேரிடர்கள் மற்றும் மீன்பிடி படகுகளில் உள்ள இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக மீனவர்கள் அதிகமாக பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு ரிலையன்ஸ் அறக்கட்டளை கடலில் பாதுகாப்பாக மீன்பிடிப்பதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில் சார் பயிற்சி இயக்குனரகத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் துறைத்தலைவர் கேப்டன் விஸ்வநாதன், கேப்டன் சகாய றெக்ஸ் மற்றும் பொறியாளர் சிவசுடலை மணி ஆகியோர் படகு இயந்திர பராமரிப்பு மற்றும் உயிர் பாதுகாப்புச் சாதனப் பயன்பாடு குறித்து விளக்கி கூறினர். மேலும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின்கடல் கால நிலை குறித்த தகவல் அடங்கிய மச்சிலி செயலியின் செயல்பாடுகள் குறித்து மேலாளர் ஆண்டனி எட்வர்ட் சிங் விளக்கம் அளித்தார். இந்த விழிப்புணர்வு நிகழிச்சியில் 40 க்கும் அதிகமான படகு உரிமையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கள ஒருங்கிணைப்பாளர் மகாதேவன் செய்திருந்தார்.


