தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் செய்துங்கநல்லூர் அல் மஸ்தூன் நூல் பழைய பள்ளிவாசல் பக்ரீத் பெருநாள் தொழுகை நடந்தது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தின் மாநில பேச்சாளர் அப்துல் ரகுமான் பெருநாள் குத்பா சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
இஸ்லாமிய மார்க்கத்தின் இரு பெருநாட்களும் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டவை. நோன்புப் பெருநாளும், பக்ரீத் பெருநாளும் ஏழைகளுக்கு தர்மம் வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன. இஸ்லாத்தின் இந்தப் போதனைகளைப் பின்பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு அறப் பணிகளைச் செய்து வருகின்றது.
இந்த நாளில் ஏழைகள் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக ஆடு, மாடுகளைக் குர்பானி கொடுத்து அதன் இறைச்சியை ஏழைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் கட்டளையிட்டுள்ளது.
இதை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிழகமெங்கும் பக்ரீத் பெருநாள் அன்று ஆடு, மாடுகள் அறுக்கப்பட்டு அதன் இறைச்சிகளை ஏழைகளுக்கு விநியோகம் செய்து வருகிறோம் அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான ஏழை குடும்பங்களுக்கு இறைச்சிகளை வழங்கி உள்ளோம் .
மேலும் இந்த ஆடு, மாடுகளின் தோல்களை விற்று அதிலிருந்து கிடைக்கும் தொகையைக் கொண்டு ஏழைகளுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி, மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு சேவைகளையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செய்து வருகின்றோம்.
இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டார். .
சிறப்புத் தொழுகையில் மட்டும் சுமார் 250 பெண்கள் உட்பட சுமார் 500 பேர் கலந்து கொண்டு தொழுகை மற்றும் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் கிளைத்தலைவர் சாதீக செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் கனி பாட்சா, துணைதலைவர் வாசீம், துணை செயலாளர் அப்துல் கனி மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


