தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து இணைய வழியில் நடத்தி வந்த 150 உரை நிகழ்வுகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து, அதன் நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா தேனியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருச்சிராப்பள்ளி சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். தேனித் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மு. சுப்பிரமணி, செயலாளர் சு. சி. பொன்முடி, பொருளாளர் அ. முகமது பாட்சா, அ. பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச்செயலாளர் மு. ரேணுகாதேவி வரவேற்புரையாற்றினார். திண்டுக்கல், ஆர்.வி.எஸ் கல்விக் குழும இயக்குநர் முனைவர் வை. கிருஷ்ணகுமார் பாராட்டுரையும், தேனி கம்மவார் சங்கப் பொதுப்பள்ளியின் செயலாளர் சேதுராஜன் வாசு வாழ்த்துரையும் வழங்கினார். இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் சிறப்பு விருந்தினாராகக் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பெற்ற விருதாளர்களுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டினார். இவ்விழாவில் முத்தமிழ்த் தேனீ விருது 2 பேர்களுக்கும் சொற்சுவைத் தேனீ விருது 15 பேர்களுக்கும், தமிழ்ச்சேவைத் தேனீ விருது 7 பேர்களுக்கும், தமிழ்ச்சுவைத் தேனீ விருது 5 பேர்களுக்கும் என்று மொத்தம் 29 விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், தமிழ்நாடு அரசு விருது பெற்ற நான்கு தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றனர். காய்கனிச் சிற்பக் கலைஞர் மு. இளஞ்செழியன், தர்ப்பூசனியில் துணைவேந்தர் உருவம் பொறித்த காய்கனிச் சிற்பத்தினை பரிசாக அளித்தார். முடிவில் துணைச்செயலாளர் இரா. முருகேசன் நன்றி கூறினார்.
*சொற்சுவைத் தேனீ விருது பெற்றவர்கள்*
* சென்னை, ப. அருணகிரி
* செய்துங்கநல்லூர், முத்தாலங்குறிச்சி காமராசு
* திருச்சி, ரெ. நல்லமுத்து
* தூத்துக்குடி, க. மகேந்திரன்
* கூடலூர், ப. புதுராஜா
* மதுரை, சோழ. நாகராஜன்
* கோவிலூர், க.கலா காசிநாதன்
* பெங்களூர், க. மலர்விழி
* நாகப்பட்டினம், ந. புனிதலெட்சுமி
* கடையநல்லூர், பா. வேலம்மாள்
* தஞ்சாவூர், பொ. திராவிடமணி
* கோயம்புத்தூர், பத்மினி பிரகாஷ்
* கோயம்புத்தூர், கிருபா நந்தினி
* சென்னை, அரங்க. மல்லிகா
* திருநெல்வேலி, ஆ. சந்திரபுஷ்பம்
*தமிழ்ச்சேவைத் தேனீ விருது*
* திருச்சிராப்பள்ளி, துரை. மணிகண்டன்
* தூத்துக்குடி, மு. ஐயப்பன்
* காரைக்குடி, பழ. பாஸ்கர்
* சென்னை, கோ. மணி
* தேனி, மு. சு. முத்துக்கமலம்
* திருச்சிராப்பள்ளி, நெ. நிலவன்
*தமிழ்ச்ச்சுவை தேனீ விருது*
* நாகப்பட்டினம், தெ. வாசுகி
* மதுரை, ஜா. ஜூலி பிரதிபா
* மாமண்டூர், அ. அமலா
* கடலூர், ப. கவிதா
* தூத்துக்குடி, செ. சாந்தி
*பாராட்டு பெரும் தமிழ்நாடு அரசு விருது பெற்ற தேனித் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள்*
* தமிழ்ச்செம்மல் விருதாளர் பி.நாகராஜன்
* தூயத் தமிழ்ப் பற்றாளர் விருதாளர், தி. இராஜபிரபா
* கலை நன்மணி விருதாளர், சு. செந்தில்குமார்
* கலை முதுமணி விருதாளர், வீ. ராஜேந்திரன்


