ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை திட்டப் பணிகளை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நட்டாத்தியில் புதுப்பிக்கப்பட்ட நூலகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நட்டாத்தி ஊராட்சி கண்ணாண்டிவிளையில் ரூ.9.8 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் ஆகியவற்றை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் பட்டாண்டிவிளையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடங்களையும் வாழவல்லான் நர்சரி பள்ளியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து, கொற்கையில் மகளிர் சுய உதவி குழுவினர் தயாரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விளையாட்டு பொருட்கள் மற்றும் செயற்கை நகைகளை பார்வையிட்டனர். ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


