வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் கமாண்டோ வீரர்களுக்கு தீயணைப்பு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் உள்ள கமாண்டோ வீரர்களுக்கு தீயணைப்பு பயிற்சி மற்றும் போலி ஒத்திகை பயிற்சி நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் நிலைய அலுவலர் இசக்கி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தீ தடுப்பு மற்றும் மழை வெள்ளக்காலங்களில் பொதுமக்களை எப்படி காப்பாற்றுவது, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


