செய்துங்கநல்லூர் மாணவன்
பாளை பள்ளியில்
கம்யூட்டர் பாடத்தில் 100 மதிப்பெண்
செய்துங்கநல்லூரை சேர்ந்த அப்துல் மகன் முகம்மது நைவ்பல். இவர் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் ரோஸ்மேரி மெட்ரிகுலேசன் பள்ளியில் 12 வகுப்பு படித்து வருகிறார். இவர் தற்போது நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் கம்யூட்டர் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். அவரை பள்ளி முதல்வர் ஜெயந்தி உள்பட ஆசிரியர்கள் பாராட்டினர். முகம்மது நைவ்பல் தமிழ் 90, ஆங்கிலம் 86, இயற்பியல் 93,, வேதியியல் 89, கணக்கு பாடத்தில் 88 மதிப்பெண் பெற்றுள்ளார்.


