எஸ்டிபிஐ கட்சியின் 14வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் நவாஸ் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். ஸ்ரீவைகுண்டம் தொகுதி தலைவர் அபூ ஹ§பைஸ் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நிர்வாகி முத்துவாப்பா, அன்சாரி, தாரிக், கபீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சிவகளை, கேம்பலாபாத் ஆகிய இடங்களில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கொடியேற்றப்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
கேம்பலாபாத் கிளை சார்பாக ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து பேட்மாநகரம் பேட்மாநகரம் கிளை சார்பாக சாலையோரம் மரக்கன்று நடப்பட்டது.
கட்சியினுடைய தொண்டர்களும் நபருக்கு ஒரு மரம் நட வேண்டும் எனவும் இரத்ததானம் மற்றும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என தொகுதியின் சார்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.


