இந்த கட்டுரையில் 1800 காலகட்டங்களில் பொதிகை மலையில் ஓடிய பல்வேறு ஆறுகளின் பெயர்கள் அறிய முடிந்தது.அத்துடன் பாசனம் பெறும் விளை நிலங்களின் அளவு குறைந்ததற்கு வணிக ரீதியாக காப்பி, தேயிலை, உருவாக்கப்பட்டதும் ஒரு காரணம்.
730 ஏக்கர் காடு 9891 ரூபாய்க்கு விற்கப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது.
1842-ல் மரங்களை வெட்ட தடை விதித்த ஆட்சித் தலைவர் குறித்தும்
காப்பி தோட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த சேரன்மகாதேவி சார் ஆட்சியர் குறித்தும் அறிந்து கொள்ள முடிந்தது.
1866ல் திருநெல்வேலி ஆட்சியர் ஆர்.கே பக்கீள் மற்றும் வன அதிகாரி பிரேசியர் ஆகியோர் பொருநை மலையை காக்க எடுத்த முயற்சிகள் நடவடிக்கைகள் காரணமாக காடுகள் தற்போது வரை பாதுகாக்கப்பட்டு வருவது பற்றிய தகவல்கள் அனைத்தும் மிக முக்கியமானவை.
ஆங்கிலேயரிடம் இருந்த அக்கறையும், பொறுப்பும், சுதந்திரம் பெற்ற பிறகு நம்மவர்களுக்கு இல்லாமல் போனதன் விளைவு 1980 கால கட்டங்களில் சில மாதங்கள் தாமிரபரணி வறண்டு போனது என்ற தகவல் அதிர்ச்சி அடைய செய்கிறது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் பல்லுயிர் காடுகள் செயல்பட்டு வடுவதும், அதில் சிறப்பாக செயல்பட்டு வரும் அதிகாரிகளை அறிமுகப்படுத்தியதும் பெருமைக்குரியது. சிங்கம்பட்டி ஜமீன் கைகளில் இருந்த மாஞ்சோலை எஸ்டேட் எப்படி பாம்பே டிரேடிங் கம்பெனிக்கு மாறியது என்பதை அடுத்த பகுதியில் அறியும் ஆர்வத்துடன் தொடர்கிறோம்.
✍? ராஜசுரேஷ்
நெல்லை.
20/05/22.


