ஆறாம்பண்ணையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணை கிராமத்தில் உள்ள சேவை மையத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலர் ராமலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஆறாம்பண்ணை ஊராட்சி துணை தலைவர் அப்துல் கனி, வார்டு உறுப்பினர் இப்ராஹிம், கருங்குளம் ஒன்றிய தோட்டக்கலை மற்றும் விவசாயம் அலுவலக அதிகாரிகள் கிராம நிர்வாக உதவியாளர், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் மக்கள் நலச் சங்கத் தலைவர் சையத், ஊராட்சி உதவியாளர் ஹரிஹரசுந்தரம் முறப்பநாடு காவல் நிலைய போலீசார் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கிராத்தின் தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.


