வல்லநாடு சிவன் கோவிலில் உழவாரப் பணி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஆவுடைஅம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் உள்ளது. சுயம்புலிங்க மூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ள இந்தக் கோவிலில் சங்கரன்கோவில் சைவ சித்தாந்த உழவாரப் பணிக்குழு சார்பில் அதன் தலைவர் சண்முகவேலம்மாள் தலைமையில் உழவாரப் பணி நடந்தது.
இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமிகள் மற்றும் சிவனடியார்கள் உழவாரப் பணியில் கலந்து கொண்டனர். உழவாரப் பணியின் போது கோவிலைச் சுற்றியுள்ள முட்செடிகள், புல் புதர்கள் வெட்டி எடுத்தனர். மேலும் கோவில் மதில் சுவர்களில் முளைத்திருந்த செடிகளை அகற்றினர். கோவில் தெப்பக்குளம் மற்றும் வெளிப் பிரகாரம் சுத்தம் செய்தனர்.
மாலையில் சுவாமி, அம்பாள் மற்றும் நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்கார பூஜைகள் நடந்தது. கோவில் அர்ச்சகர் சண்முகசுந்தபட்டர் பூஜைகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


